27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

வெள்ளத்தினால் வீட்டுக்கு இடம்பெயர்ந்த சிறுத்தை

முல்லைத்தீவு இளங்கோபுரத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டது.

முத்தையன்கட்டு நீர்த்தேக்கம் உட்பட பல குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பியதால் காட்டுப்பகுதிகள் மற்றும் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

சிறுத்தை வீட்டுக்குள் இருப்பதைக் கண்ட குடியிருப்பாளர்கள் வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களின் தகவலின் பேரில் கிளிநொச்சியில் இருந்து கால்நடை வைத்தியர் உட்பட வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று வந்து அதனை மீட்டு பத்திரமாக விடுவித்துள்ளனர்.

நன்கு வளர்ந்த சிறுத்தை ஆறு மாத வயதுடையது என்றும் கனமழை மற்றும் வெள்ளத்தின் போது முதலைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இணைப்பேராசிரியர் ரிச்சர்ட் பிரியோ நூலக நிறுவனத்துக்கு வருகை

east pagetamil

‘பைத்தியக்காரன் அர்ச்சுனாவை வெளியேற்றுங்கள்’: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு!

Pagetamil

யாழ் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Pagetamil

தாதியர் பயிற்சிக் கல்லூரி புத்தர்சிலை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது: கோ.கருணாகரம்

Pagetamil

குருக்கள்மடத்தில் வாகன விபத்து: மூவர் வைத்தியசாலையில் அனுமதி

east pagetamil

Leave a Comment