மனைவியை கொன்ற கணவன்!

Date:

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோசர் குளம் பகுதியில் இன்று (28) அதிகாலை 5 மணியளவில் கணவன் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமம், டோசர் குளம் வீதி, இலக்கம் 72 இல் வசிக்கும் உசைன் நோனா பரீனா என்ற 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் பூ விற்று வாழ்ந்து வந்த பெண் என பொலிசார் தெரிவித்தனர்.

நீண்டகால குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

44 வயதுடைய சந்தேக நபர், தனது மனைவியை கோடரியால் வெட்டி கொன்றுவிட்டு, பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (28) திஸ்ஸமஹாராம நீதவானால் நடத்தப்படவிருந்தது.

சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பரந்தன்- முல்லை வீதி இந்திய பாலத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை!

பரந்தன் முல்லைத்தீவு வீதியிலுள்ள இல. 11/1 (இந்தியன் பாலம்) பாலத்தினூடாக கனரக...

புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட...

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்