26 C
Jaffna
December 10, 2024
Pagetamil
கிழக்கு

கஞ்சிகுடிச்சாறில் மாவீரர் நினைவேந்தல்

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன.

இந்த மாவீரர் துயிலும் இல்ல துப்புரவுப் பணிகள் திருக்கோவில் பிரதேச மாவீரர் குடும்பங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டதோடுஇ மேற்படி துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியில் காணப்பட்ட பற்றைப்புதர்களை அகற்றிஇ விழுந்து கிடந்த நினைவுச் சுடர்களை நிறுத்தி வைத்து துப்புரவுப் பணிகளை முன்னெடுத்தனர்.

இதன்படி இன்று இம்மாவீரர் துயிலும் இல்லத்தில் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாலை தமிழரின் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.இன்று மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுர அரசு இடமளிக்கும் என்று நம்பிக்கையுடன் அங்கு சென்ற மக்களிடம் பொலிஸார் பாதுகாப்பு கெடுபிடிகளை விதித்து அங்கு செல்வதை தடுக்க முயற்பட்டள்ளனர்.அத்துடன் அங்கு சென்ற வாகனங்களின் இலக்கத்தகடுகள் பொலிஸாரினால் பதியப்பட்ட பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் பொலிஸார் முரண்பட்டதுடன் அங்கு சிறு பதற்ற நிலையும் ஏற்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள்; துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜெ. எஸ் அருள்ராஜ்

east pagetamil

டெங்கை ஒழிக்க கிண்ணியாவில் கூட்டு சேர்ந்த பல அமைப்புக்கள்

east pagetamil

திருகோணமலையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்

east pagetamil

யாழ்பல்கலையில் சிறப்பு விருந்தினராக திருகோணமலை உமாசுதனுக்கு அழைப்பு

east pagetamil

திருகோணமலை புகையிரத நிலையத்திற்கான வரவேற்பு, ஒளி அடையாள பலகைகள் கையளிப்பு

east pagetamil

Leave a Comment