26.3 C
Jaffna
December 10, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழில் சீரற்ற காலநிலையால் 1901 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1901 குடும்பங்களைச் சேர்ந்த 7010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1520 பேரும்,
சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 265 குடும்பங்களைச் சேர்ந்த 928 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 215 குடும்பங்களைச் சேர்ந்த 901 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 599 பேரும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேரும் பாதிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் கூட்டணிப் பேச்சு… விந்தன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்: ரெலோ தலைமைக்குழு தீர்மானம்!

Pagetamil

Leave a Comment