இரவில் வீட்டுக்குள் புகுந்த திருடன், வீட்டில் தனியாக வசித்து வந்த 74 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்து, அவரிடமிருந்து 4500 ரூபா பணம், 5000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண்ணின் கணவர் இதற்கு முன்னரே இறந்துவிட்டதாகவும், பிள்ளைகள் திருமணமாகி தனித்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு 10.45 மணியளவில் மின்சாரத்தை அணைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர், மூதாட்டியை வல்லுறவுக்குள்ளாக்கி, கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.