26 C
Jaffna
December 10, 2024
Pagetamil
குற்றம்

யாழில் காதலனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து யுவதியிடம் கப்பம் பெற முயன்ற 2 பொலிசார் கைது!

யாழில் யுவதி ஒருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காட்டி மிரட்டி கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே கைது செய்யப்பட்டனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்களை, சுன்னாகம் பொலிசார் கைது செய்தனர்.

யுவதி தனது காதலனுடன் இருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் இந்த பொலிசாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. யுவதியின் படங்களை வைத்து பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அவரது வீட்டுக்கு சென்று தாம் கொழும்பில் இருந்து வந்துள்ள பொலிஸ் விசேட பிரிவினர் என அறிமுகப்படுத்தியுள்ளனர்.

யுவதிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவரது தொலைபேசி இலக்கங்களை பெற்று சென்றுள்ளனர்.

பின்னர் விசாரணைகளின் அடிப்படையில் , சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் , அவற்றை தவிர்ப்பதாயின் , 12 இலட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் , தம்மை சந்திக்க வேண்டும் என்றும் தொலைபேசி ஊடாக மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் , இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கைது செய்துள்ளனர்.

இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து, அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

வவுனியா, கல்முனையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

கனடா போயும் திருந்தாத யாழ்ப்பாண கணக்காளர்: ஓசிக் குடிக்கு ஆசைப்பட்டு விமானத்தில் சிக்கிய பரிதாபம்!

Pagetamil

Leave a Comment