டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!

Date:

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் இரண்டு கோடி ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வழக்கில் சாட்சியமளிக்க அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் ர் இந்த பிடியாணையை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு சுகயீனம் இருப்பதால் அவர் நீதிமன்றில் ஆஜராக மாட்டார் என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் என்பவர், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்தில் கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்து தலா பத்து மில்லியன் ரூபாய் காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக, அவருக்கு எதிராக டக்ளஸ் தேவானந்தவால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் முதல் சாட்சியான தேவானந்தாவுக்கு சாட்சியமளிப்பதற்கான கடைசித் திகதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் ஹேவாபத்திரன நீதிமன்றில் தெரிவித்தார்.

இரு தரப்பையும் பரிசீலித்த நீதவான், சாட்சிக்கு பிடியாணை பிறப்பித்து, புகார் விசாரணையை ஜனவரி 23ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலிமுகத்திடல் மின்கம்பத்தில் ஏறி போராடிய இளைஞன்!

"களனி விகாரையில் தியானம் செய்துவிட்ட வந்த போது நான் பொலிசாரால் கைது...

சர்ச்சைப் பிக்கு சிறைக்குள்ளும் சலசலப்பு!

கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

உலகம் மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது: ரஷ்ய ஜனாதிபதி புடின்!

சர்வதேச நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், உலகம் மிகவும் ஆபத்தானதாகி வருவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்