25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil
உலகம்

ஒரே வளாகத்தில் 5 பெண்களுடன் இரகசியமாக குடும்பம் நடத்திய மன்மதராசாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

நான்கு ஆண்டுகளாக ஒரே வீட்டு வளாகத்தில் ஐந்து பெண்களுடன் இரகசியமாக உறவுகளைப் பேணி வந்த சீன மன்மதராசா பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டு வளாகத்தில் வசிக்கிறார்கள் – அவர்களில் ஒருவர் அவரது மனைவி. இந்தப் பெண்கள் அனைவருமே, மன்மதராசா தம்முடன் மட்டுமே உறவு வைத்துள்ளதாக நம்பிக் கொண்டிருந்துள்ளார்கள்.

ஜிலின் மாகாணத்தில் உள்ள ஜிலின் நகரில், தனது 30 வயதில் சியாஜூன் என்ற புனைப்பெயர் கொண்ட நபரே இந்த கில்லாடி.

மன்மதராசா சியாஜூன், தன்னை ஒரு பணக்கார குடும்ப வாரிசாக போலி நாடகம் ஆடி,  பிரமாண்டமான வாக்குறுதிகள் மற்றும் போலி ஆடம்பர பரிசுகளால் ஒவ்வொரு பெண்ணையும் கவர்ந்தார்.

அவர் ஒரு ஆடம்பரமான குடும்பக் கதையை உருவாக்கினார், அவரது பெற்றோர்கள் பரந்த குளியல் மற்றும் கட்டுமானத் தொழில்களை நடத்தினார்கள் என்று பெருமையாகக் கூறினார். உண்மை வேறுபட்டது: அவரது தாயார் குளியல் இல்ல உதவியாளராக பணிபுரிந்தார். அவரது தந்தை ஒரு கட்டுமான தொழிலாளி.

2019 இல் அவர் ஒன்லைனில் சந்தித்த சியாஜியாவுடன் அவரது மன்மத வித்தை தொடங்கியது. சியாஜியா கர்ப்பமாகியதும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னரே, தனது காதல் கணவன் ஏழை என்பதை அந்தப் பெண் கண்டுபிடித்தார்.

சியாஜூன் தனது குடும்பத்துக்கு பணம் கொடுக்கவில்லை. மாறாக, மனைவியிடமிருந்து கடன் வாங்கத் தொடங்கினார். இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டு, மனைவியை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியேற்றினார். தங்கள் குழந்தைக்கு ஒரு முழுமையான குடும்பத்தை வழங்குவதற்காக, அந்தப் பெண் சியாஜூனை விவாகரத்து செய்ய விரும்பவில்லை, ஆனால் தங்கள் குழந்தையை சுதந்திரமாக வளர்ப்பதற்காக தனியாக வசித்தார்.

சியாஜூன் தனியாக வசிக்க ஆரம்பித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர் தனது இரண்டாவது இலக்கான சியாஹோங்கை ஒன்லைன் கேம் மூலம் சந்தித்தார். அவரது பணக்கார “வாரிசு” செயலால் கவரப்பட்ட சியாஹோங் காதல் வசப்பட்டார். வருங்கால வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடும் ஒருவரைப் போல் காட்டிக்கொண்டு, 140,000 யுவான் கடனாகக் கொடுக்குமாறு காதலியிடம் கேட்டார். சியாஹோங் தனது முழு சேமிப்பையும் — 140,000 யுவான் ஒப்படைத்தார். இருவரும் அவரது சட்டப்பூர்வ மனைவிக்குக் கீழே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக குடியேறினர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சியாஹோங் கர்ப்பமாக இருந்தார்.

சியாஜூனின் மன்மதவித்தை நிற்கவில்லை. அவர் அதே வளாகத்தில் மேலும் இரண்டு பல்கலைக்கழக மாணவிகள், மற்றொரு தாதியை காதல் வலையில் வீழ்த்தினார். இந்த நேரத்தில், அவர் ஒரு வலுவான குடும்ப பின்னணியுடன் ஒரு போலீஸ்காரராக தன்னைக் காட்டினார்.

அவர்களிடம் முறையே 15,000 யுவான், 10,000 யுவான் மற்றும் 8,000 யுவான் மோசடி செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில்,  சியாஹோங்க்கு அவரது படிப்புக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. அதனால், காதலன் சியாஜூன் தனக்கு தர வேண்டிய 10,000 யுவானைத் திருப்பித் தருமாறு கேட்டார். அவர் அவளைச் சந்திக்க ஒரு சொகுசு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்தார். ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையை காதலியிடம் கொடுத்தார், அதில் 100,000 யுவான் இருப்பதாகவும், அதை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்று கூறினார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, சியாஜூன் தனது அழைப்புகள் மற்றும் செய்திகளைத் தவிர்த்துவிட்டதால், புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்த பிறகு, சியாஹோங் பையைத் திறந்தார் – அதில் போலியாக அச்சிடப்பட்ட நாணயங்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலி பணத்தைக் கண்டுபிடித்ததையடுத்து அவர பொலிசில் புகார் செய்ததை அடுத்து சியாஜூனின் பொய் வலை வெளிச்சத்திற்கு வந்தது. விசாரணையில் சியாஜூன் தனது காதலிகளிடமிருந்து 280,000 யுவான்களை மோசடியாக திருடியது தெரியவந்தது.

பொலிசார்  அவர்களைத் தொடர்பு கொண்ட பிறகுதான், அவரது சட்டப்பூர்வ மனைவி மற்றும் சியாஹோங், ஒரே குடியிருப்பு வளாகத்தில் ஒரே ஆணுடன் தொடர்புள்ளதைக் கண்டுபிடித்தனர். ஏனைய பெண்களும் தகவலறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

ஜிலின் நகரத்தில் உள்ள ஃபெங்மேன் மாவட்ட நீதிமன்றம், சியாஜூனுக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மோசடி, இருதார மணம் மற்றும் திருட்டு குற்றங்களுக்காக 120,000 யுவான் அபராதம் விதித்தது.

அவரது சட்டவிரோத ஆதாயங்களிலிருந்து மொத்தம் 280,000 யுவான் கைப்பற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

Pagetamil

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

14 வயது சிறுவனால் வரையப்பட்ட ஓவியம் – கவிழ்க்கப்பட்டது சிரியா ஆட்சி

east pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

Leave a Comment