25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil
மலையகம்

காதலியின் நிர்வாணப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற காதலன் கைது!

நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி,  காதலியிடம் பணம் பறிக்க முயன்ற காதலனை இரத்தினபுரி வேவெல்வத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதினொரு மாதங்களுக்கு முன்னர் இரத்தினபுரி நகரில் தற்செயலாகச் சந்தித்த நுவரெலியாவைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனுடன் காதல் உறவுகொண்ட 22 வயதுடைய ரத்னபுர, வேவெல்லத்த பகுதியில் வசிக்கும் யுவதியொருவர், இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

காதலர் கேட்டுக்கொண்டதால், தனது நிர்வாணப் படங்களை எடுத்து காதலரின் கைபேசிக்கு அனுப்பியதாகவும், காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் தான் அவ்வாறு செய்ததாகவும் அந்த யுவதி பொலிஸில் ஒப்புக்கொண்டுள்ளார்.

நுவரெலியாவைச் சேர்ந்த காதலன் இரத்தினபுரிக்கு வந்து காதலியை பல தடவைகள் சந்தித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணத்தின் பின்னர் வீடு ஒன்றை நிர்மாணிக்க விரும்புவதாகவும் அது நுவரெலியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு 100,000 ரூபா தேவைப்படுவதாகவும் குறித்த இளைஞர் யுவதியிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி தனது விருப்பத்தின் பேரில் 100,000 ரூபாவை கொடுத்துள்ளதுடன், தனது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியையும் கொடுத்துள்ளார்.

சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, சந்தேக நபர் மீண்டும் யுவதியிடம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று யுவதி கூறியதை அடுத்து, தனது நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக காவல்துறையில் புகார் அளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இ.போ.ச காவலாளி கொலை: 3 பேருக்கு விளக்கமறியல்!

Pagetamil

கண்டி தேசிய வைத்தியசாலையில் CT Scanner இயந்திரத்திற்கு கௌரவிப்பு

east pagetamil

காதலிக்க மறுத்த யுவதியை அடித்தே கொன்ற ஒருதலைக் காதலன்!

Pagetamil

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Pagetamil

Leave a Comment