மக்களையும், கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தி 2,3 பேர் மத்திய அரசில் அமைச்சு பதவியை பெற்று, எமக்கான தீர்வை பெறலாம். அதை கண்டுகொண்டும் பார்க்க மாட்டோம் என இருக்க முடியாது. காலங்கள் மாறும், நிலமைகள் மாறும், அதை பரிசோதித்து பார்க்கலாம் என்பதே எனது நிலைப்பாடு என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (31) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த முக்கிய சில அம்சங்கள்-
ரணில் அரசுடன் டீல் செய்து, மதுபானச்சலை அனுமதிப்பத்திரம் பெறவில்லையென சொன்னதை நம்பியே, இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சொன்னது பொய், மதுபானச்சாலை அனுமதிப்பத்திரத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என தெரிய வந்தால், அவர்கள் மீது கட்சி நடவடிக்கையெடுக்கும்.
தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என இதுவரை கூறி வந்த ஜேவிபியினர், தற்போது, அதை நீக்கத் தேவையில்லை- துஸ்பிரயோகம் செய்யாமலிருந்தாலே போதும் என கூற ஆரம்பித்துள்ளனர்.
மதுபானச்சாலை அனுமதிப்பத்திரத்தை விற்ற விக்னேஸ்வரனின் மான் அணியை, மான் மார்க் பியர் என கிண்டலடிக்கிறார்கள்.