காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ பொகவானை பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயாவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளது.
கெசல்கமுவ ஓயாவில் சடலமொன்று தலைகீழாக மிதந்து கொண்டிருப்பதாக கால் நடைகளுக்கு புல் அறுக்க சென்ற நபர் ஒருவரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் 35மற்றும் 40வயதுக்கிடைப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1