வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கர்தார்புராவில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ரேகா சோனி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார். 3-ம் வகுப்பு ஆசிரியையான இவர் தனது வகுப்பறையில் மாணவர் ஒருவரை தனக்கு மசாஜ் செய்ய வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.
அதில், வகுப்பறையில் படுத்திருக்கும் அந்த ஆசிரியையின் காலில் மாணவர் ஒருவர் மசாஜ் செய்து கொண்டிருப்பதும், பிற மாணவர்கள் படித்துக்கொண்டிருப்பதும் பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை பார்த்த கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
जयपुर के सरकारी स्कूल में महिला टीचर ने बच्चों से दबवाए पैर। क्लास में एक टीचर कुर्सी पर बैठी, दूसरी चटाई पर लेटकर बच्चों से दबवा रही#NBTRajasthan #Jaipur @madandilawar @BhajanlalBjp pic.twitter.com/Enya9dKJDm
— NBT Rajasthan (@NbtRajasthan) October 10, 2024
அத்துடன் மூத்த அதிகாரி ஒருவரை பள்ளிக்கு அனுப்பி விசாரணை நடத்தினர். அப்போது வகுப்பறையில் இந்த விதிமீறல் நடந்தது உறுதி செய்யப்பட்டது. உடனே அந்த ஆசிரியையை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.