நேற்று (08) காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியின் முகாமையாளர் காப்பாற்றியுள்ளார்.
சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் உள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்தின் திசையிலிருந்து நபர் ஒருவர் அலறல் சத்தம் கேட்டு நீர்த்தேக்கத்திற்குச் சென்ற போது இளைஞன் ஒருவர் நீர்த்தேக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்ததாக உல்லாச விடுதியின் முகாமையாளர் ரஞ்சித் சில்வா தெரிவித்தார்.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் சிலர் மீன் பிடிக்கவும் நீராடவும் வருவதாக தெரிவித்த முகாமையாளர், குறித்த இளைஞன் மீன் பிடிக்க வந்து நீர்த்தேக்கத்தில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றார்.
நீர்த்தேக்கத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் 18-20 வயதுடையவர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1