26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

தமிழ் அரசு கட்சியே எம்முடன் இணைய வேண்டும்!

தமிழ் அரசு கட்சி தமக்குள் உள்ள உள்ளக முரண்களை தீர்த்து, முடிந்தால் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஒற்றுமை பற்றி பேசும் தமிழ் அரசு கட்சியே எம்முடன் இணைய வேண்டும்.

இவ்வாறு ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ் கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடாக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவத்ததாவது..

தமிழ் தேசிய பரப்பிலுள்ள பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்டு வந்தது போன்று தற்போதும் தமிழ்த் தேசிப் பரப்பிலுள்ள பல்வேறு கட்கள் ஒன்றிணைந்து ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக செயற்படுகிறோம்.

இந்த கூட்டணியில் தற்போது ஜந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஆகையினால் தமிழ் மக்களுக்கு ஜக்கியம் வேண்டும் என கருதுகிறவர்கள் ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் வந்து இணையுமாறு நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம்.

எமது இந்த அழைப்பிற்கு பதிலளிக்காத தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இத் தேர்தலில் மீண்டும் வந்து போட்டியிடுமாறு கூறுயிருக்கின்றனர். அந்த அழைப்பானது உளப்பூர்வமாக இல்லாமல் வெறுமனே ஏனோ தானோ என்பது போல அமைந்திருந்தது.

உண்மையில் தமிழரசுக் கட்சி தனியொரு கட்சியாகவே இப்போது இருக்கிறது. ஆனால் நாங்கள் ஐந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணியாக இருக்கிறோம். ஆகையினால் தமிழரசுக் கட்சியினரே எமது கூட்டணியில் வந்து இணைந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தமிழ் மக்களின் ஐக்கியம் குறித்து போசுகிற தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசிய கட்சிகள் எமது கூட்டணியில் இணைந்து செயற்பட விரும்புகிற பட்சத்தில் எப்போதும் வந்து இணைந்து கொள்ளலாம்.

தமிழரசுக் கட்சியை பொறுத்த வரையில் ஒருமித்த தீர்மானத்தை எடுக்ககூடிய நிலைமையில் அவர்கள் இல்லை. அவர்களுக்கு இடையே உள்முரண்பாடு அதிகமாக ஏற்பட்டுஉள்ளது. இதறாலேயே அக் கட்சி இப்போது நீதிமன்றமும் சென்றுள்ளது.

அவர்களால் ஒருமித்து திட்டவட்டமான தீர்மானமொன்றை எடுக்க முடியாது. இப்போது இருக்கிற நிலைமையை பார்த்தால் தங்கள் கட்சிக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.

இவ்வாறு ஒரு கட்சிக்குள்ளேயே சமூகமான அமைதியான சூழலை ஏற்படுத்தி ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாதவர்கள் எவ்வாறு பொது இணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

இதனால் அக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இத் தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்கப்படுமா என்பது கூட சந்தேகம் நிலவுகிறது. ஆகவே தமது கட்சிக்குள்ளேயே உள்ளக முரண்பாடுகளை தீர்த்து முதலில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கட்டும்.

அதன் பின்னர் ஐக்கியம் குறித்து பேசலாம். கூட்டசி குறித்தும் பேசலாம். எனவே தமது கட்சிக்குள்ளேயே பல பிரிவுகளாக இல்லாமல் ஓரணியாக ஒருமித்த தீர்மானத்தை எடுத்து அதனை உளப்பூர்வமாக முதலில் அறிவிக்கட்டும். அதன் பின்னர் பார்த்துக் கொளளலாம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

புதிய இராணுவத்தளபதி நியமனம்!

Pagetamil

புதிய கடற்படை தளபதி நியமனம்

Pagetamil

யாழில் போராட்டம்

Pagetamil

இணைய மிரட்டல் சம்பவம் இரு மாணவர்கள் கைது

east tamil

“தனியார் வகுப்புகள் இல்லாமல் சிறந்த கல்வி பெற இயலும்” – ஜோசப் ஸ்டாலின் கருத்து

east tamil

Leave a Comment