இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, பேருந்து கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட புதிய பேருந்து கட்டண பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1