நான்கு பிரதேசங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 05 விளையாட்டு நிலையங்களை சம்பிரதாயங்கள் இன்றி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் மாத்தளையில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை ஹொக்கி மைதானம்,
பிங்கிரிய வடமேற்கு விளையாட்டு வளாக நீச்சல் குளம், ஓமந்தை வவுனியா மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள பல்விளையாட்டு உள்ளக அரங்கம்,
ஓமந்தை வவுனியா மாவட்ட விளையாட்டு வளாக நீச்சல் தடாகம் ஆகியனவே இவ்வாறு திறக்கப்படவுள்ளன.
இதனை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்க பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அரசியல்மயப்படுத்தப்பட்ட கல்வி முறைமை அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.