26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

SL vs NZ | இலங்கை 602/5 என டிக்ளேர்: 75 வருடங்களில் அதி விரைவாக 1000 ஓட்டங்கள் கடந்து கமிந்து மென்டிஸ் சாதனை!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களை குவித்து, டிக்ளேர் செய்துள்ளது.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, 2 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்துள்ளது.

இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தனது 13வது இன்னிங்ஸில் ஐந்தாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களை பெற்றிருந்தார். குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றார். டினேஸ் சந்திமால் 116 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.

நியூசிலாந்து தரப்பில் க்ளென் பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை கைப்பற்றினார்.

இலங்கை தேனீர் இடைவேளையின் பின்னர் 602/5 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, ரொம் லதத்தை ஆரம்பத்திலேயே இழந்துள்ளது. அவர் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

கமிந்து மென்டிஸ் இன்று டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்தார். அவரது 8வது டெஸ்ட் போட்டி இது. விளையாடிய இன்னிங்ஸ்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 1950க்குப் பிறகு மிக வேகமாக 1000 டெஸ்ட் ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

Leave a Comment