28.8 C
Jaffna
October 3, 2024
Pagetamil
குற்றம்

வவுனியாவில் 14 வயது மாணவனை துஸ்பிரயோகம் செய்ததாக இளம் ஆசிரியை கைது!

வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயது மாணவன் ஒருவருக்கு குறித்த பயிலுனர் பெண் ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்ததாகவும், இது தொடர்பில் பாடசாலையில் முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவனின் பெற்றோரால் சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது

முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவனின் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாக்கு மூலத்தின் அடிப்படையில் பயிலுனர் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளியூரில் கணவன்… ரிக்ரொக்கில் காதலன்… உணவு கேட்டு அழுத குழந்தை: கொலைக்குற்றச்சாட்டில் 21 வயது அம்மா கைது!

Pagetamil

32 வயதான பெண் அரச உத்தியோகத்தரும், 18 வயது மாணவனும் தலைமறைவு: யாழில் பரபரப்பு சம்பவம்!

Pagetamil

பெண் சட்டத்தரணி கழுத்தறுத்து கொலை!

Pagetamil

கள்ளக்காதல் சந்தேகத்தால் விபரீதம்; மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டிய கணவன்: யாழில் கொடூரம்!

Pagetamil

இரகசியமாக குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி: குடும்பஸ்தர் கைது!

Pagetamil

Leave a Comment