28.8 C
Jaffna
October 3, 2024
Pagetamil
சினிமா

மனைவியிடமிருந்து உடைமைகளை மீட்டுத்தருமாறு ஜெயம் ரவி பொலிசில் புகார்!

ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மீது சென்னை அடையாறு காவல் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்துச் செய்வதாகவும், இருவரும் பிரிந்து வாழப் போவதாகவும் சமீபத்தில் ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

ஆனால், ஆர்த்தி, “எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையைப் பார்த்து நான் கவலையும், மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பான விஷயங்கள் திரைத்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகவே, ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிந்ததற்குப் பாடகி ஒருவர்தான் காரணம் என சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் வைரலானது.

அத்தகைய சர்ச்சைகளுக்கு, “தவறானத் தகவல்களைப் பரப்புகிறார்கள். இதில் யாரையும் இழுக்க வேண்டாம். ‘வாழு, வாழவிடு’. தனிப்பட்ட வாழ்க்கையைத் தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்க விடுங்கள்” என்று முற்றுப் புள்ளி வைத்துப் பேசியிருந்தார் ஜெயம் ரவி.

இந்த நிலையில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மீது சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. மேலும், ஜெயம் ரவி தனது புகாரில், சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் இருக்கும் தனது உடைமைகளை மீட்டுத் தர வேண்டும் என்று காவல் துறையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இதய ரத்தக் குழாயில் வீக்கம்; ரஜினிகாந்துக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தி சிகிச்சை: என்ன நடந்தது?

Pagetamil

கடந்த பத்து ஆண்டுகளுக்குள் வெளியானவற்றில் கண்டிப்பாக பார்த்தேயாகவேண்டிய 10 தமிழ் திரைப்படங்கள்

Pagetamil

ஒக்.6இல் பிக்பாஸ் சீசன் 8 தொடக்கம்

Pagetamil

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரிய நடிகர் கார்த்தி – லட்டு கருத்தால் அதிருப்தி

Pagetamil

சுவர் பிரச்சினை: நடிகை த்ரிஷா தொடர்ந்த வழக்கில் சமரசம்

Pagetamil

Leave a Comment