இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், எந்த வேட்பாளரும் 50 வீத வாக்கை பெற்றிருக்கவில்லை. இதையடுத்து, முன்னணியிலுள்ள இரண்டு வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் போட்டியிருந்து நீக்கப்பட்டு, அவர்களிற்கு அளிக்கப்பட்ட வாக்கில் 2 அல்லது 3வது தெரிவுகள் இடப்பட்டிருந்தால், அவை கணக்கிடப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இதில் அனுர வெற்றியடையவது உறுதியாகியுள்ளது.
இதன்மூலம், இதுவரை பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க ஓய்வுபெறுகிறார். ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிப்பதற்காக பல எம்.பிக்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியதாக ரணில் மீது குற்றச்சாட்டு உள்ளது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கஜன் தரப்பு, ஈ.பி.டி.பி, இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமி்ழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளை சேர்ந்தவர்கள் மதுபான அனுமதி பத்திரத்துக்காக ரணிலை ஆதரித்ததாக விமர்சனமுண்டு.
ஜனாதிபதியாக அனுர பதவியேற்றால் மதுபானச்சலை உரிமம் பெற்றவர்களின் விபரங்கள் வெளியாகுமென கருதப்படுகிறது.