தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரித்து, கிளிநொச்சியில் சி.சிறிதரன் குழுவினரால் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கலந்து கொண்டுள்ளார்.
இன்று பகல் வவுனியாவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் ஆராயும் குழுவின் கூட்டம், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
கட்சியின் நிலைப்பாட்டை, கட்சித்தலைவர் மாவை சேனாதிராசாவே அறிவித்தார்.
வவுனியாவிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் வரும் வழியில், கிளிநொச்சியில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து நடத்தப்படும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்.
கட்சியொன்றின் தலைவர் இவ்வாறு தறிகெட்டு நடந்து திரிவது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.