வவுனியா, ஓமந்தை பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சிறுமியை மீட்ட பொலிசார், வவுனியா பொது வைத்தியசாலையில் பரிசேதனைக்காக அனுமதித்தனர்.
பரிசோதனையிலும், சிறுமியின் வாக்குமூலத்திலும் அவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதியானது.
2022ஆம் ஆண்டு முதல் சிறுமியை அவரது தந்தை துஸ்பிரயோகம் செய்து வருவது தெரிய வந்தது. அந்த வீட்டில் தங்கியிருந்த இளைஞன் ஒருவரும், கடந்த மாதம் 28ஆம் திகதி சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் தந்தையை ஓமந்தை பொலிசார் இன்று கைது செய்தனர். இளைஞனை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தந்தை, தனது மூத்த மகளை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றைய மகளையும் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.