மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய சுகாதார இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக அரம்பேபொல இராஜாங்க அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து கீதா குமாரசிங்க நீக்கப்பட்டதையடுத்து அந்த பதவி வெற்றிடமானது. தனக்கு ஆதரவளிக்காததை தொடர்ந்து கீதா குமாரசிங்கவை ஜனாதிபதி ரணில் பதவி நீக்கியிருந்தார்.




