28.8 C
Jaffna
October 3, 2024
Pagetamil
மலையகம்

முச்சக்கர வண்டியில் அழுகிய சிசுவின் சடலம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்பகுதியில் சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உரிய ஹென்பொல்ட் தோட்டத்தின் டி.எல் பிரிவில் உள்ள தொடர் வீட்டு குடியிருப்புக்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து முச்சக்கரவண்டி சாரதியின் தாய், முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போது முச்சக்கரவண்டியின் பின் பகுதியில் இருந்து சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியின் சாரதி அதே தோட்டத்தில் வசிப்பவர் எனவும், அவர் முச்சக்கரவண்டியில் பயணமொன்றை மேற்கொண்டு இன்று (10) காலை தனது வீட்டிற்கு வந்து நிறுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அகரபத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிசுவின் சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து நீதவானின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக அக்கரபத்தனை பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நண்பனின் காதலியை சந்திக்க சென்ற மாணவன் தாக்குதலால் உயிரிழப்பு

Pagetamil

100 அடி மரத்திலிருந்து விழுந்து பலி

Pagetamil

கள்ளக்காதல் விபரீதம்: முச்சக்கர வண்டியிலிருந்து மீட்கப்பட்ட சிசு கழுத்து நெரித்து கொல்லப்பட்டது உறுதி!

Pagetamil

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வினால் இடிந்த விழுந்த வீதி

Pagetamil

முச்சக்கர வண்டிக்குள் சிசுவின் சடலம்: இளம் யுவதியும், பக்கத்து வீட்டு குடும்பஸ்தரும் கைது!

Pagetamil

Leave a Comment