மீண்டும் அஜித்துக்கு நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தவர்கள் அஜித் மற்றும் த்ரிஷா. இந்த இணை படங்களில் மிகவும் பேசப்பட்ட ஜோடி.
தற்போது அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தேதிகள் குழப்பம் அனைத்தையும் சமாளித்து, த்ரிஷா முடித்துக் கொடுத்துள்ளார். இதனால் அஜித் மிகவும் நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்துக்கு நாயகி ஒப்பந்தம் ஆகாமல் இருந்தது. இதற்கு த்ரிஷாவின் பெயரை சிபாரிசு செய்திருக்கிறார் அஜித். இதனால் த்ரிஷாவை சந்தித்து முழுக்கதையையும் கூறி, ஓகே செய்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். விரைவில் அஜித் – த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.