மாத்தளை நகரில் தேர்தல் விதிகளை மீறி வீதி நாடகம் நடத்தப்படுவதாக தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்ற போது நாடக நடிகை, நடிகர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் கலைந்து சென்றனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் உருவம் தாங்கிய சுவரொட்டிகளை ஏந்தியிருந்த பிரமுகர்கள்களும், வீதி நாடகக்காரர்களும் தேர்தல் அதிகாரிகள் வருவதற்குள் அங்கிருந்து வெளியேறினர்.
அந்த குழுவினருக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக மாத்தளை தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், மாத்தளை உதவி பிரதம தேர்தல் அதிகாரி உத்பல ஜயரத்ன பொலிஸாருடன் அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1