எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் தனது நிலைப்பாட்டை எழுத்து வடிவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (1) வவுனியாவில் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எம்.ஏ.சுமந்திரன் தனது நிலைப்பாட்டு ஆவணத்தை வழங்கினார்.
இன்றைய கூட்டத்தில் பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவில்லை. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால் இன்றைய கூட்டத்திலும் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பில்லையென கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
3
+1
1
+1
+1