யாழ்ப்பாணம் கொடிகாமம் சாவச்சேரி பகுதியில் நடாத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 25 டிப்பர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
அனுமதிப் பத்திரங்களின்றி மணலுடன் 24 டிப்பரும் அனுமதியின்றி மரக்குற்றிகளுடன் ஒரு டிப்பரும் என 25 டிப்பர்கள் கொடிகாமம், சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் பணிப்புரைக்கமைய சுற்றிவளைப்பு நேற்றையதினம் (28) நடத்தப்பட்டது.
கைப்பற்றப்பட்ட டிப்பர்களையும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் முற்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயாராகியுள்ளனர்.
தொடர்ச்சியாக அனுமதியின்றி டிப்பரில் மண் அகழும் செயற்பாடு நடைபெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1