பணம் கொடுக்காவிட்டால், யுவதி ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் விநியோகிப்பதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில், அக்குறணையைச் சேர்ந்த இளைஞரை செப்டம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையில், சந்தேகநபருக்கும், யுவதிக்கும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் சிறிது காலம் காதல் இருந்தது தெரியவந்தது. உறவு முறிந்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் யுவதியிடமிருந்து பணம் பறிக்க புகைப்படங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தின் உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க தீர்மானித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1