28.8 C
Jaffna
September 11, 2024
இலங்கை

ஐ.தே.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பாலித நீக்கம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அவர் தொடர்பில் கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் சில பாரதூரமான விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் கட்சியின் செயலாளரை எந்த நேரத்திலும் நியமிக்கவும் நீக்கவும் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த சில நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு அவர் கடமைகளுக்காக வரவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தவிர்ந்த ஏனைய அதிகாரிகளுக்கு தேர்தல் செயற்பாடுகளுக்கான பொறுப்புகளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு.ரணில் விக்கிரமசிங்க நேற்று (28) கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதிப் பொதுச் செயலாளர் கிரிஷாந்த தியோடர், சிறிகொத்த பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமல் செனரத், ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் ஆகியோரை ‘சிறிகொத்த’ கட்சியின் தலைமையகத்தில் தங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிப்பர் மோதி பாடசாலை மாணவி பலி

Pagetamil

மசாஜ் நிலையத்தில் 2 அழகான யுவதிகளை தெரிவு செய்து கடத்திச் சென்று கூட்டு வல்லுறவு: இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Pagetamil

இலஞ்சம் வாங்கிய போது சிக்கிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சகாக்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

பிம்ஷானியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன: தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

விஜயகாந்தின் கட்சியும் சஜித்துக்கு ஆதரவு!

Pagetamil

Leave a Comment