ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ என்று எவருக்கும் தெரியாது எனவும் பிரபல தொழில் அதிபரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா பெயரை ஜனாதிபதி வேட்பாளருக்கு முன்மொழிந்தமையினால் மொட்டு கட்சியின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் இணைந்து நேற்று முன்தினம் (14) திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் ஆதரவாளர்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பானது முன்னாள் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் சந்தித் சமரசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் தேவைக்கு அமைய தாம் பல கட்சிகளுடன் பல வேலை திட்டங்களை முன்னெடுத்து சென்றதாகவும், தற்போது மாற்றம் ஒன்றிற்காக நாட்டின் அபிவிருத்தி பயணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்து பயணிக்க உள்ளதாகவும் இதன் போது தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நீங்கள் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவு வழங்குவது எதற்காக என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலம் முதல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தம்மிக்க பெரேரா அவர்களின் பெயர் மும்மொழியப்பட்டதாகவும் அது தொடர்பில் தமது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியதில் அரசியல் அனுபவம் இல்லாத ஒரு தொழிலதிபரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் திருத்தியின்மை ஏற்பட்டமையினால் நாட்டை மீள கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும் நீங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் பாராளுமன்றம் தெரிவானவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் உங்கள் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாமா? என எழுப்பிய கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் கபிலன் நுவன் அதுகோரள தற்போது ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தான் தமது ஆதரவாளர்களின் கலந்துரையாடலின் பின்னரே முடிவெடுத்ததாகவும் தனது மக்களுக்கு தேர்தலில் தோல்வியுற்று எதிர்க்கட்சியாக அமர்ந்து 5 வருட காலத்தை வீணடிப்பதை விட்டு தேர்தலில் வெற்றியிடும் வேட்பாளருடன் இணைந்து தமது பிரதேசத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தாம் இந்த முடிவை எடுத்ததாக இதன்போது தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை சபாநாயகருமான ஆரியவதி களபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வெற்றி பெறுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை தேர்தல் தினத்தில் வாக்கு பெட்டிகளில் வாக்குகள் விழும்போது தெரியும் அடுத்த ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்கள் தான் என்று தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ் –