பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாவும் அவர் தலைமையிலான தேசிய காங்கிரஸும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
அதாவுல்லா மற்றும் அவரது பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்தித்து தமது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதியின் அணுகுமுறை குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பின் போது தேசிய காங்கிரஸினால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகள் அடங்கிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1