யாழ்ப்பாணத்தை மிரட்டும் முகமூடிக் கொள்ளையன்: தகவல் கோரும் பொலிசார்!

Date:

யாழில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான சீ.சீ.ரீ.வி காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தின் நல்லூர், மானிப்பாய், கோப்பாய், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அண்மைக் காலமாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக துவிச் சக்கர வண்டிகளில் வந்து பகலிலும் அதேபோன்று இரவு நேரங்களிலும் முகமூடிகள் கையுறைகள் அணிந்து அடையாளம் காண முடியாதவாறு வீடுகளுக்குள் உட்குகுந்து தொடர் திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

இத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கிற நிலையில் அவை தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் சில தினங்களிற்கு முன்னர் வீடொன்றிற்குள் புகுந்து திருடப்பட்ட சிசிரிவி காணொளிகளில் குறித்த நபரின் முகமூடி கழன்றிருப்பதை அவதானிக்க கூடியாதாக இருக்கிறது.

இதனால் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு கேட்டுள்ள பொலிஸார் அவ்வாறு தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மாணம் வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்