திருகோணமலை திருக்கோணேச்சர ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தாலி மற்றும் சிலம்பு எனபன கானாமல் போயுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த மாதம் 29 ஆம் திகதி குறித்த இரு சாமி நகைகளும் திருடப்பட்டதாகவும் அதற்கு பதிலாக பித்தளை நகைகள் குறித்த இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் இது குறித்து கடந்த 4ஆம் திகதி திருகோணமலை திருக்கோணேச்சர ஆலய பரிபாலன சபையின் உறுப்பினர் ஒருவரினால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல நூறு வருட காலமாக சோழர் காலம் தொடக்கம் கோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த தாலி மற்றும் சிலம்பு எனபன போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் தாலி மற்றும் சிலம்பு களவாடப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவத்தில் பல நூறு கோடி பெறுமதியான ரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 சவரன் தாலி என்பன திருடப்பட்டதாககுறித்த திருக்கோணேச்சர ஆலயத்தின் நற்பெயருக்கு கலங்கம் வரும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பான பொய்யான செய்திகள் பரவியு வருவதுடன் அவ்வாறு பரவிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் குறித்த திருட்டு சம்பவத்தில் 2.5 பவுன் மதிப்புள்ள குறித்த இரு நகைகள் மாத்திரம் திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ்-