தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா கட்சித் தலைமைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, மாற்று வேட்பாளரை நியமிக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வௌியிடப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1