பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை தாமரை தடாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் முறையான அனுமதி கிடைக்காமையால் நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வில் அறிவிக்கவுள்ளதாக மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேர்தல் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கட்சி அலுவலகத்தில் நாளை 7ஆம் திகதி காலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளதாக மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன ஆரம்பத்தில் இருந்து கூறியது போன்று கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாது எனவும் பெரமுனவின் வேட்பாளர் தொழிலதிபர் தம்மிக்க பெரேராவே எனவும் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆடல், பாடல் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வேட்பாளர் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.