எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி அணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் திலங்கன சுமதிபால மற்றும் ரோஹன லக்ஷ்மன் பியதாச ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,
“புதிய குழுவொன்றுக்கு நாட்டைக் கையளிக்க வேண்டுமானால், ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டமைப்பில் அதற்கான பலமான தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களுடன் இணைந்து இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எமது அடையாளத்தை வைத்துக்கொண்டு தனி தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறோம்.
இந்த நேரத்தில் நாங்கள் சரியான முடிவை எடுத்துள்ளோம் என்று எங்கள் அன்பான கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.