கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்திற்கு நீர் விநியோகம்

Date:

தற்போது கிளிநொச்சியில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக  பொது
மக்களின் நீர்ப் பாவனையானது  வழமைக்கு மாறான அதிகமாக காணப்படுகின்றது.
ஆதாவது கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட
மக்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் நீர் விநியோகத்தை 24  மணிநேரமும்
வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக இனிவரும் நாட்களில்
நீரினை மட்டுப்படுத்தப்பட்ட நேர ஒழுங்கில்  நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை
அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக வெப்பமான காலநிலை நிலவிவருவதன் காரணமாக மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதனடிப்படையில்
பூநகரி,பொன்னகர்,பாரதிபுரம்,விவேகானந்தநகர் ஆகிய பகுதிகளுக்கு தினமும்
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை நீர் விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதியில் குறைந்த அழுதத்திலும்  நீர் விநியோகம் காணப்படுவதனால் பொது மக்கள் நீரை சிக்கனமாகவும், சேமித்தும் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு: அநீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் ஒன்றிணைவோம் – பவன் கல்யாண் பேச்சு

நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில்...

ஈரானின் அணுசக்தி, ஏவுகணை இலக்குகளை அழிக்கும் இலக்கின் அருகில் இருக்கிறோம்: இஸ்ரேல் பிரதமர்!

ஈரானில் இஸ்ரேல் தனது இலக்குகளை அடைவதற்கு மிக அருகில் உள்ளது என்று...

ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் நடந்தது எப்படி?: அமெரிக்கா விளக்கம்!

அமெரிக்க இராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, சனிக்கிழமை இரவு மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்