இலங்கையர்கள் விசா இன்றி தாய்லாந்திற்கு சுற்றுலா செல்லும் அனுமதியை இன்று முதல் தாய்லாந்து நடைமுறைப்படுத்துகின்றது.
இலங்கை உட்பட மொத்தமாக 93 நாடுகளுக்கு, தாய்லாந்து இந்த அனுமதியை வழங்குகின்றது.
இவ்வாறு தாய்லாந்துக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் வரை தங்கலாம்.
ஆனால் அவர்கள் தங்குவதற்கான செலவு தொகையை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
அத்துடன் 60 நாட்களுக்குள் திரும்புவதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டு குடிவரவு அதிகரிகளின் ஓப்புதலை பெற்றிருத்தல் அவசியம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1