யாழ்ப்பாணத்தில் சூரியசக்தி மின்சாரம் வழங்கலில் முறைகேடு!

Date:

யாழ். மாவட்டத்தில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கயிடுமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிராந்திய மின் இணைப்புப் பொறியிலாளர் காரியாலயத்தில் சூரியசக்தி இணைப்பு அனுமதிக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் போது முறைகேடான விதத்தில் அனுமதிகள் வழங்கப்படுவதாகவும், மிக நீண்ட காலமாக விண்ணப்பத்தவர்களின் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும், இவை குறித்து மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு முறைப்பாடு செய்த வாடிக்கையாளர் ஒருவர் பழிவாங்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்தே ஜனாதிபதியின் செயலாளரினால் குறித்த விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கையிடுமாறு ஜனாதிபதியின் செயலாளரினால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரிடம் கோரப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்