பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் முதலாவதாக இன்று இடம்பெரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவர், அதனைத் தொடர்ந்து, சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுகளிலும், அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புதிய வர்த்தக சேவை நிலைய திறப்பு விழாவிலும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.