28.9 C
Jaffna
July 15, 2024
முக்கியச் செய்திகள்

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி -நேற்று மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 6வது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஏற்கனவே இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் நிறைவு நாட்களில் அடையாளம் காணப்பட்ட நான்கு மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்படாத நிலையும் காணப்படுகின்றது.

இதுவரையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே எதிர்வரும் நாட்களில் இவை அகழ்தெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் தடயவியல் பொலிசார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.

இரண்டாம் நாளாகவும் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின் மனித உரிமைகள் அலுவலர் செல்ரின் அகிலன் அகழ்வு பணிகளை கண்காணித்தார்.

எலும்புக் கூட்டுத்தொகுதிகளோடு துப்பாக்கி சன்னங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்படும் வேலிகம்பிகளின் துண்டுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஏழு மனித எச்சங்களையும் வரும் நாட்களில் முழுமையாக வெளியே எடுக்க முடியும் எனவும் தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருமலையில் வாகனம் ஒன்றில் எரியூட்டப்பட்ட நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்பு.

Pagetamil

ஜனாதிபதி தேர்தல்: அடிப்படை உரிமை மனுவினை 15 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Pagetamil

முறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Pagetamil

பாடசாலை ,மருத்துவமனை சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் புதிய விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Pagetamil

இரா.சம்பந்தனின் வெற்றிடத்துக்கு பாராளுமன்ற குழு தலைவராக செல்வம் அடைக்கலநாதனின் பெயர் முன்மொழிவு!

Pagetamil

Leave a Comment