29.6 C
Jaffna
July 13, 2024
உலகம்

காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்- 29 பேர் உயிரிழப்பு!

காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல் – அவ்டா பாடசாலையைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இந்தத் தாக்குதலை நேற்று நடத்தியுள்ளது.

இந்நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், இத் தாக்குதலின் போது சுமார் 2,000 பேர் பாடசாலையில் தங்கியிருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் கடந்த 4 நாட்களில் 4 பாடசாலைகள் மீது இவ்வாறு இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தத் தாக்குதலை மோசமான கொலை எனத் தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விமானம் ஒன்று மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியதில்,  3 பேர் பலியாகினர்.

Pagetamil

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கட்டாயம் சிரிக்க வேண்டும்-ஜப்பானின் புதிய சட்டம்

Pagetamil

உலக மக்கள் தொகை இந்த ஆண்டின் இறுதியில் 820 கோடியாக உயரும் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

Pagetamil

பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 குழந்தைகள் உயிரிழப்பு – 130க்கும் மேற்பட்டோர் காயம்

Pagetamil

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான ஐ.நா சபையின் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.

Pagetamil

Leave a Comment