29.6 C
Jaffna
July 13, 2024
இலங்கை

இலங்கை சீன நாட்டின் கொலனியாவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது-மீனவ தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா அதிருப்தி.

இலங்கை சீன நாட்டின் கொலனியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதோடு பொருத்தமற்ற பொருத்து வீடு முதல் சீன நாட்டினால் முன்னெடுக்கபடும் உணவு திட்டம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்து பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்ளளுமாறு சீன நாட்டிற்கு அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார் .
யாழ் மாவட்டத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..
முதலாவதாக சீனாவில் இருந்து வடகிழக்கு கடற்றொழிலாளர்கள் கெண்டுவரப்பட்டுள்ள பொருத்து வீடு தொடர்பாக வடக்கு மாகாணத்தினை பொறுத்தமட்டில் மன்னார் மாவட்டம் சுழிபுரம் ஏனயை கடற்றொழில் கரையோர கிராமங்களிலே  பொருத்துவீடு கடற்றொழிலாளர்களுக்கு பொருத்தமற்றது என அந்தந்த மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினருக்கு நிராகரித்து கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொருத்து வீடு பொருத்தமற்றது என்பதற்கு இங்குள்ள  கடற்றொழிலாளர்களாக நாங்கள் பின்வரும் காரணங்களை முன்வைக்கின்றோம். நாங்கள் ஓர் இலங்கை குடிமக்கள் தமிழர் தாயகத்திலே நாம் வாழ்கின்றோம். எங்களுக்கு எங்கள் கரையோரத்திற்கும் சூழலுக்கும் பாதுகாப்பானது கல்வீடே ஆகும் .
நாங்கள் இலங்கையின் நிரந்தர குடியிருப்பாளர் இங்கே சீன நாட்டினாலே வழங்கப்படுகின்ற பொருத்துவீடு கரையோரத்திற்கு பொருத்தமற்றதும் உவர்நீருக்கு வெகுவிரைவில் உக்கலைடந்தும் விடும் .சீரற்ற காலநிலையினால் பாதிக்கபட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு இலங்கை திணைக்களங்களால் வழங்குவதில்லை.
சீன நாட்டு மக்கள் போன்று எமது பிரதேசத்தை மாற்ற இலங்கை அரசு முற்படுகின்றது. எங்களுடைய பிரதேசத்தில் வாழவ்தற்கு ஏற்ற சூழலில் சீமேந்து வீடே பொருத்தமானதாகும்.
சீன நாடு எமக்கு உதவிபுரிவதாக இருந்தால் வடக்கு கிழக்கு மீனவர்களின் கருத்தினை பெற்றே திட்டங்களை அறிமுகபடுத்தவேண்டும்.உதவிகளை பெறுகின்றோம் என்பதற்காக தரமற்ற உதவியினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாம் சீன நாட்டு கொலனிகள் அல்ல வடக்கு கடற்றொழில் அமைச்சர் வட கடலை சீன பண்ணைகளால் நிரப்பியுள்ளார்.
விஞ்ஞானபூர்வ ஆய்வின்றி இன்று இந்த கடலட்டை பண்ணை நிறுவப்பட்டது .இன்று பினாமிகளின் பெயரில் சீனாவிற்கு கடலட்டை பண்ணைகள் இயங்கி வருகின்றது.
இன்றும் இதே அமைச்சர் எம்மீது பொருத்து வீட்டு திட்டத்தினை திணிக்கின்றார் . அரசியல் ஆதாயம் தேவைபடுபவர்களுக்கு பொருத்துவீடு தேவைபடலாம் .ஆனால் நிரந்தரமான கடற்றொழில் மக்கள் நிரந்தர தீர்வினை கேட்கின்றோம்.
இதேபோல சீன நாட்டின் உணவு திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எங்களுடைய நாடு பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு டொலர்ஸினை கொண்டுவரவேண்டும் அந்நிய செலாவணியை கொண்டுவரவேண்டும் என ஆழம் குறைந்த பிரதேசங்களில் எல்லாம் கடலட்டை பண்ணைகள் உருவாக்கபட்டன.
இந்த கடலட்டைகளை சீனாவுக்கு அனுப்பி சீனாவில் இருந்து அரசியை இறக்குமதி செய்து எங்களுடைய மக்களுக்கு அரசியை வழங்க முன்வருகின்றார்கள்.
எங்களுடைய நாட்டில் உற்பத்தி செய்கின்ற அரசியினை கொள்வனவு செய்யலாம் தானே .சுதேச உற்பத்தி பொருடக்களை தானே நாம் உண்ணமுடியும் .சீன நாட்டு அரசியை யார் சாப்பிடுவது ?எங்களின் வளம் அழிக்கப்படும் பொழுது டொலர்ஸ் தேவைப்படுகின்றது என சட்டத்தினைமீறி நடக்கின்றீர்கள் . எங்களுடைய நாட்டு மக்களுக்கு சீன நாட்டு மக்கள் உதவி செய்யப்பட்டும்.
சீன நாடு இதனை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய உதவிகளை நாம் வரவேற்கின்றோம். ஆனால் பொருத்தமான திட்டத்தினை கவனியுங்கள்  என அவர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி தேர்தல்: அடிப்படை உரிமை மனுவினை 15 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Pagetamil

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Pagetamil

குழந்தையையும் , மனைவியின் கர்ப்ப பையையும் இழந்து நீதியும் இன்றி இருக்கிறேன். – பாதிக்கப்பட்ட சுரேஸ் ஆதங்கம்

Pagetamil

அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று மகிழ்ந்த நாமல் ராஜபக்ச தம்பதி

Pagetamil

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பிரபல கோடீஸ்வரரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றது.

Pagetamil

Leave a Comment