29.6 C
Jaffna
July 13, 2024
சினிமா

பாலாவின் ‘வணங்கான்’ ட்ரெய்லர்

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வழக்கமான பாலா படங்களில் வரும் நாயகன் எப்படி இருப்பாரோ அதேபோல ஒரு நாயகனான அருண் விஜய். பெரும்பாலான கதாபாத்திரங்கள் சீரியஸாகவே வலம் வருகின்றன. கொலை ஒன்று நடக்க, அதைத் தொடர்ந்து காட்சிகள் நகர்கிறது. நீதிபதி கதாபாத்திரத்தில் மிஷ்கின் கவனம் ஈர்க்கிறார்.

ஒரு கட்டத்தில் வெறித்தனமிக்க நாயகன் எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார். வன்முறை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. பின்னணியில் ஜி.வி.பிரகாஷின் இசை தனித்து தெரிகிறது. பெரிய அளவில் வசனங்கள் இல்லாமல் வேகமாக காட்சிகள் நகர்வதால், கதையை கணிக்க முடியவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட நாயகன், அதற்கு பழிவாங்குவது போல தெரிகிறது. பாலாவின் வழக்கமான படத்தின் அனைத்து சாயல்களையும் ட்ரெய்லரில் காண முடிகிறது.

பாலா இயக்கத்தில், அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஒருகையில் பெரியார் சிலையும், மறு கையில் விநாயகரையும் அருண் விஜய் ஏந்தியிருக்கும் முதல் பார்வை ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீட்டு திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்தியன் 2 திரைப்படம் நாளைய தினம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

Pagetamil

பிரபல நடிகர்கள் மீது புகார்: நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் தீர்மானம்

Pagetamil

போயஸ் கார்டனில் வீடு கட்டியது ஏன்? – தனுஷ் விளக்கம்

Pagetamil

கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக நடிக்கும் தான்யா

Pagetamil

விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தின் பணிகள் நிறைவு

Pagetamil

Leave a Comment