28.6 C
Jaffna
July 13, 2024
முக்கியச் செய்திகள்

இரா.சம்பந்தனின் வெற்றிடத்துக்கு பாராளுமன்ற குழு தலைவராக செல்வம் அடைக்கலநாதனின் பெயர் முன்மொழிவு!

இரா.சம்பந்தனின் மறைவை தொடர்ந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடாளுமன்ற குழு தலைவராக செல்வம் அடைக்கலநாதனின் பெயரை முன்மொழியும் நகர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களின் மத்தியில், சிரேஸ்ட தலைவராக செல்வம் அடைக்கலநாதனே விளங்குவதால், அவரை பாராளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கும் யோசனையை ரெலோ முன்வைத்துள்ளது.

ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் கையொப்பமிட்டு, இது தொடர்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சி, புளொட் ஆகிய கட்சிகளுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த யோசனையை புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஏற்றுக்கொண்டுள்ளார். அதை தொடர்ந்து, பாராளுமன்ற குழு தலைவராக செல்வம் அடைக்கலநாதனின் பெயரை முன்மொழிந்துள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி தேர்தல்: அடிப்படை உரிமை மனுவினை 15 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Pagetamil

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி -நேற்று மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Pagetamil

முறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Pagetamil

பாடசாலை ,மருத்துவமனை சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் புதிய விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Pagetamil

பிரிட்டனின் அடுத்த பிரதமராகிறார் கெய்ர் ஸ்டார்மர்

Pagetamil

Leave a Comment