28.6 C
Jaffna
July 13, 2024
இலங்கை

அலி சப்ரி ரஹீமை கைது செய்ய உத்தரவு!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன கல்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருச்சநம்பிட்டியை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமொன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினரை பொறுப்புக்கூறும் வழக்கை விசாரித்த போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.

இதற்கு முன்னரும் நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி தேர்தல்: அடிப்படை உரிமை மனுவினை 15 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Pagetamil

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Pagetamil

குழந்தையையும் , மனைவியின் கர்ப்ப பையையும் இழந்து நீதியும் இன்றி இருக்கிறேன். – பாதிக்கப்பட்ட சுரேஸ் ஆதங்கம்

Pagetamil

அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்று மகிழ்ந்த நாமல் ராஜபக்ச தம்பதி

Pagetamil

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பிரபல கோடீஸ்வரரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றது.

Pagetamil

Leave a Comment