மோட்டார் சைக்கிள் திருடன் கைது!

Date:

மோட்டார் சைக்கிள் திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமதிலக தலைமையிலான பொலிஸார் 24 வயதான சந்தேகநபரை சாவகச்சேரி பகுதியில் கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் ஒரு கிராம் 30 மில்லிகிராம் அளவான ஹெரோயினும் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வருகை தந்தபோது “வெளியே நின்ற மோட்டார் சைக்கிளை பார்க்க ஆசையாக இருந்தது. அதனால் அதனை திருடிச் சென்றேன்” என சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணைகளுக்கு பின்னர்
சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி படுகொலைக்கு சர்வதேச கண்காணிப்புடன் விசாரணை கோரி மட்டு மாநகரசபையில் தீர்மானம்!

செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள...

கஹவத்தை கொலையில் கைதான இருவருக்கும் விளக்கமறியல்

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில்...

வெளிநாட்டு பெண் மீது வெறிகொண்ட 81 வயது பிக்கு கைது!

ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்