Pagetamil
இலங்கை

பியுமி ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் போதைப்பொருள் கடத்தல்காரரின் வீட்டில் சிக்கியது!

6 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான குஷ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொரு்ஹகளை விமான அஞ்சல் மூலம் இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் நாவல இரண்டு மாடி வீட்டின் வாகனத் தரிப்பிடத்தில் மொடல் அழகி பியுமி ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட BMW சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் 5 கிலோ குஷ்,. 500 கிராம் கோகோயினை கூரியர் நிறுவனத்திற்கு விமானத் தபாலில் அனுப்பி வைத்த, சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர், பொலிஸாரைத் தவிர்த்து நீண்ட நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், அவரைக் கைது செய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

மருதானை பிரதேசத்தில் பிரதான வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி நிறுவன உரிமையாளரான சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் விளைவாக கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வருட முற்பகுதியில், சந்தேகநபர் நாவல, கொஸ்வத்த பிரதேசத்தில் உள்ள அதி சொகுசு வீடொன்றில் தங்கியிருந்தார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் தேடப்படத் தொடங்கியதும், அவர் வீட்டை விட்டு வெளியேறி நாவல பாடசாலை மாவத்தைக்கு அருகாமையில் உள்ள அதி சொகுசு வீடொன்றில் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல கோடி ரூபாய் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பியுமி ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் மற்றும் சந்தேக நபர் பயன்படுத்திய தொலைபேசி தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகள் எடுக்கப்பட்டு பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்

பிள்ளையானிடம் நடத்தப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளிப்படுகிறது!

Pagetamil

மாத்தறை சிறைச்சாலையில் களேபரம்: கண்ணீர்ப்புகை வீச்சு!

Pagetamil

துப்பாக்கிச்சூட்டில் டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை!

Pagetamil

துப்பாக்கி இயங்காததால் தப்பித்த வர்த்தகர்: துப்பாக்கிதாரி மடக்கிப் பிடிப்பு!

Pagetamil

முழு உலகத்துக்குமான ஆன்மீக தலைவராக பணியாற்றியவர் பாப்பரசர்

Pagetamil

Leave a Comment