29.6 C
Jaffna
July 13, 2024
இந்தியா

இரு குழந்தைகளுடன் இந்தியாவிற்கு படகில் சென்ற மன்னார்ப் பெண்!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த 2 குழந்தைகள் மற்றும் அவரது தாய் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மன்னார் மாவட்டம் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோகவள்ளி (34), அவரது குழந்தைகள் அனுஜா (08), மிஷால் (05) ஆகிய மூவர்  தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடற்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வந்து இறங்கி உள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த மெரைன் போலீஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், யோகாவள்ளி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதி முகாமில் பிறந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியவர் அங்கே திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்ததும் தெரிய வந்தது.

இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் அவர் தமிழகம் வந்ததாகவும் தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பின்னர் மூவரையும் மெரைன் போலீஸார் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது – கர்நாடக முதலமைச்சர் .

Pagetamil

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pagetamil

மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளார்.

Pagetamil

நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை-இந்திய பிரதமர்

Pagetamil

இரண்டு நாட்கள் ரஷ்யப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியப் பிரதமர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

Pagetamil

Leave a Comment